Wednesday, November 16, 2011

அரசாங்கம் - த.தே.கூ இன்று சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சு வார்தை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் 13 வது சுற்று பேச்சுவார்தை இதுவாகும்.

இந்த பேச்சு வார்தை தொடர்பில் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்தார்.

இதனிடையே, கூட்டமைப்பின் அண்மைய வெளிநாட்டு விஜயம் இந்த பேச்சுவார்தையில் தாக்கம் செலுத்துமா? என எமது செய்தி சேவை அவரிடம் வினவியது.

இந்த நிலையில், இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜேசிங்க எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்தார்.

இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் போது, ஏற்கனவே இடம்பெற்ற கலந்துiராயடல்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரது வெளிநாட்டு விஜயம் காரணமாகவே அண்மைய சந்திப்புக்களில் கால தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment