Wednesday, November 16, 2011

கண்ணில் சிகிச்சைகளுக்காக 2012 ஆம் ஆண்டு முதல் வைத்தியர்கள் குழு!

Wednesday, November 16, 2011
கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளர்களில் 90 வீதமானவர்கள், உரிய முறையில் சிகிச்சைகளை பெற்று கொள்வதற்கு மீண்டும் வருவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அவ்வாறான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய கண் வைத்தியசாலையில் 2012ஆம் ஆண்டு முதல் வைத்தியர்கள் குழுவொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.

கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வருடமொருமுறை கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

நோயாளர்களுக்கு நினைவூட்டும் முகமாக அவர்களது பிறந்த தினத்தன்று வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுப்பப்படும் வாழ்த்துச் செய்தியில் நோயாளர்கள் கண் பரிசோதனையை மேற்கொள்ளும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு அனுப்ப சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment