Tuesday, November 8, 2011

சட்டமூலம் அரசியல் யாப்பிற்கு அமைவானது – அரசாங்கம்!

Tuesday, November 08, 2011
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் சுவீகரிப்பது தொடர்பிலான சட்ட மூலத்தை இன்று பிரதமர் டி.எம். ஜெயரத்ன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, குறித்த சட்ட மூலம், அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமையை, பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

அதன் பின்னரே, பிரதமர் இந்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கிடையில் இந்த சட்ட மூலத்துக்கு எதிராக 3 வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும், அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, உயர் நீதிமன்றம் இந்த சட்ட மூலம் நீதியானது என தீர்ப்பளித்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த சட்ட மூலம் விவாவதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அது தொடர்பிலான கேள்விகளை எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவுக்கு பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment