Friday, November 25, 2011

காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்க நடவடிக்கை-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Friday, November 25, 2011
சொந்தக் காணிகள் இல்லாத மேலும் ஐயாயிரம் குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளன. இது தொடர்பிலான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

காணி வசதிகள் இன்றி வாழ்ந்துவந்த ஐயாயிரம் குடும்பங்கள் இதற்காக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் காணிகளுக்கான சட்டபூர்வ ஆவணங்கள் இல்லாதிருந்தவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தவிர பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த அரச காணிகளில் நீண்டகாலம் வாழ்ந்துவந்தவர்களுகும் காணி உறுதிப்பத்திரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment