Sunday, November 06, 2011
சட்டத்தை கையிலெடுத்து செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சட்டத்தை செயற்படுத்துவதற்கான பொறுப்பு பொலிஸாருக்கு இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பொலிஸாரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சில குழுக்களும் சட்டத்தினை தமது கையி்லெடுப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்தார்.
240 மில்லியன் ரூபா செலவில் தலைமையக பொலிஸ் நிலையத்தின் நான்கு மாடிக் கட்டடத்தை திறக்கும் முகமாக இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பொலிஸார் தமது கடமைகளை நியாயமான முறையில் நிறைவேற்ற வேண்டுமென அனைத்து மக்களும் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்களுக்கு மக்கள் பலத்த எதிர்ப்பார்ப்புடனேயே செல்வதாக கூறிய ஜனாதிபதி அதனை நிறைவேற்றுவதற்கான சிறந்த சூழலை பொலிஸாருக்கு ஏற்படுத்திக் கொடுப்பபது தமது பொறுப்பெனவும் குறிப்பிட்டார்.
பொலிஸார் கடமையாற்றும் இடங்கள் உரிய முறையில் இருக்காத பட்சத்தில் அவர்கள் அழுத்தங்களுக்கு உள்ளாவதாகவும் அதன் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக செல்லும் மக்களிடமே வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் சேவையினை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமூகமான நிலைமை காணப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது சிறியதொரு பிரச்சினை ஏற்படினும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதாகவும், பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று சேதங்களை விளைவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதனை மக்கள் ஒரு பழக்கமாகவே முன்னெடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டம் அனைவருக்கும் பொதுவானது எனவும் கூறினார்.
அயினும் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கென முறையொன்று காணப்படுவதாகவும் அது உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment