Monday, November 28, 2011

பொலிஸாரின் அனுமதி கிடைத்தவுடன் தெற்கு அதிவேக வீதியில் பஸ் சேவைகள் ஆரம்பம்!

Monday, November 28, 2011
பொலிஸாரின் அனுமதி கிடைத்தவுடன் தெற்கு அதிவேக வீதியில் பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு பஸ்கள் அந்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டி.பந்துசேன தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு பஸ்களும் பின்னதூவையில் இருந்து காலை ஆறு மணிக்கும் ஏழு மணிக்கும் கொட்டாவையை நோக்கி பயணத்தை ஆரம்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் மீண்டும் காலை எட்டு மணிக்கும் ஒன்பது மணிக்கும் கொட்டாவையில் இருந்து பின்னதூவ வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment