Wednesday, November 23, 2011

புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் நிதியை சேகரிக்கிறார்கள்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, November 23, 2011
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களைச் சுட்டுக் கொன்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் தாக்கம் இன்றும் நாட்டை விட்டு நீங்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு எதிரான சர்வதேத்தின் மனித உரிமை பிரச்சினைகள், போர்க்குற்ற விசாரணைகள் உட்பட பல்வேறான விடயங்கள் இலங்கைக்கு பாரிய சவாலாக அமைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அன்று புலிப் பயங்கரவாதிகள் பொது மக்களுக்கிடையில் பதுங்கிக் கொண்டு எம்மைத் தாக்கினார்கள். இன்று புலிகளின் நிதியில் செயற்படும் சர்வதேச சக்திகள் மனித உரிமைகள் விடயத்தில் ஒளிந்து கொண்டு இலங்கையை தாக்குவதாகவும், இந்நிலையில் நாட்டுக்கு எதிரான அச்றுத்தல்கள் இன்னும் குறைய வில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று அலரி மாளிகையில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்..

பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு நாம் மீட்டுக் கொண்டது எமது தாய் நாட்டை மாத்திரமல்ல, 30 ஆண்டுகாலமாக நாட்டில் நிலை கொண்டிருந்த உலகத்தின் மிகவும் அச்றுத்தலான பயங்கரவாதத்தையும், வான், தரை மற்றும் கடல் ஆகிய வழிகளில் திறமையான இராணுவ கட்டமைப்பையும் தோல்வியடையச் செய்துள்ளோம்.

பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்து 2 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தேசிய பாதுகாப்புக்கான அச்றுத்தல்கள் இன்றும் குறைவடையவில்லை. உலகத்தில் காணப்படுகின்ற அமைதியான நாடுகளில் கூட பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அந்நாடுகளில் தேசிய பாதுகாப்புக்கு பயங்கரவாதத்தினால் அச்றுத்தல்கள் உள்ளன.

புலிகள் தமது நிதிகளை கொண்டு ஆயுதங்களையும் விமானங்கள் உட்பட ஏனைய போர் தளபாடங்களையும் கொள்வனவு செய்து கொண்டதுடன் அவர்களுக்கு தேவையான சீருடைகளையும் பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்காக வன்னியில் உயிர்நீத்த பிள்ளைகளின் பெற்றோர்களுக்காக ஒன்றுமே செய்து கொடுத்திருக்கவில்லை. இன்றும் புலிகளின் சர்வதே செயற்பாட்டாளர்கள் சேர்த்துக் கொள்ளும் நிதியினை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கே பயன்படுத்துகின்றனர்.

ஆனால் வன்னி மக்களுக்கு உணவு உட்பட தேவையான அனைத்து வதிகளையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அங்கு பணிபுரியும் அரச ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தை குறித்த நேரத்துக்கு வழங்கியது.

அதேபோன்று ஓய்வூதியம் பெறுவோருக்கும் உரிய நேரத்தில் கொடுப்பனவுகளை வழங்கிக் கொண்டு தான் வன்னியில் புலிகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையினை முன்னெடுத்தோம்.

இன்றும் நாட்டுக்கு எதிராக பாரிய சூழ்ச்சிகள், போலிப் பிரசாரங்கள் உட்பட இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்புக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை பாதுகாப்பிற்காக 229 பில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதில் 197 பில்லியன் படையினரின் கொடுப்பனவுகள் சம்பளம் உட்பட ஏனைய தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆயுதக் கொள்வனவுக்காக அன்று பயன்படுத்தப்பட்ட நிதி இராணுவத்தின் தரத்தை உயர்த்துவதற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டுக்கு எதிரான சவால்கள் இன்றும் ஓய்ந்தபாடில்லை. புலிகள் அன்று பொது மக்கள் மத்தியில் ஊடுருவி இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தினர். அதனை முறையாக எதிர்கொண்டு பொது மக்களை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்தோம். ஆனால், இன்று புலிகளின் நிதியினை பயன்படுத்தி சர்வதே செயற்பாட்டாளர்கள் பலர் இலங்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஆபத்தை பாதுகாப்பு தரப்புக்கள் உட்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment