Monday, November 7, 2011

அணுஆயுதங்கள் குவித்தால் ஈரான் மீது தாக்குதல் : இஸ்ரேல் எச்சரிக்கை!

Monday, November 07, 2011
ஜெருசலேம்: அணுஆயுதங்களை குவிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என்று இஸ்ரேல் அதிபர் ஷிமன் பியர்ஸ் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேல், அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், மற்ற நாடுகள் அணுஆயுதங்கள் வைத்து கொள்வதை விரும்பாத அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் ராணுவ நடவடிக்கை எடுத்தன என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையில், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு கழகம், ஈரானின் அணுஆயுத தயாரிப்பு குறித்த அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ஷிமன் பியர்ஸ் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் பொறுமை காத்து வருகிறோம். ஈரான் அணுஆயுதங்களை குவிப்பதால் அந்நாடு மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனினும், சர்வதேச நாடுகள் மூலம் நிர்பந்திப்பது, பொருளாதார தடை விதிப்பது என மாற்று வழிகள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார். இதனால் ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment