Tuesday, November 22, 2011

வரவு செலவு திட்டம் அனுகூலமானது - அரசாங்கம்!

Tuesday, November 22, 2011
முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் முறை வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை, வரவு செலவு திட்ட இரண்டாம் முறை வாசிப்பு மீதான விவாதங்கள் எதிர்வரும் 30 ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
அத்துடன், வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் 30 ம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளன.

இதனிடையே, டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரை சபை அமர்வுகளின் போது இருதரப்பு விவாதம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக பல அனுகூலமான விதத்திலான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனது வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment