Friday, November 25, 2011சென்னை : அதிமுக ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக அரசை கடுமையாக தாக்கினார். பஸ் கட்டணம், பால் விலையை தமிழக அரசு ஏற்றியதை கண்டித்து, தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று உண் ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் விஜயகாந்த் பேசியதாவது:
பால் விலை, பஸ் கட்டணத்தை அதிமுக ஆட்சி உயர்த்தியுள்ளது. மக்களோடும், தெய்வத்தோடும் தான் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் பிரச்னைக்காக தனியாக நின்று போராடிக் கொண்டிருந்தோம். கடந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் நினைத்து, என்னை அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னார்கள். மக்கள் கூறியதன் அடிப்படையில் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
அதற்காக நான் தலைகுனிந்தால் கூட தொண்டர்களை என்றுமே தலைகுனிய விடமாட்டேன். பென்னாகரம் இடைத்தேர்தலில் இப்போதைய அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அங்கு சென்று தேர்தல் பணியாற்றினார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா? இப்போது மட்டும் தேமுதிகவினர் எங்கள் தயவில்தான் ஜெயித்ததாக கூறுகிறார்கள். அடுத்து வந்த இடைத்தேர்தல்களில் தனியாக நின்று ஜெயித்து காட்டியிருக்க வேண்டியதுதானே.
உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் ஜெயிக்காமலா 10.11 சதவீத ஓட்டுகள் வாங்கினோம். மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே கட்சியை தொடங்கினேன். இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பார்கள். இவர்கள் ஆட்சியில் செத்தவன் வாயில் கூட பாலுக்கு பதிலா தண்ணியத்தான் ஊத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்துக்கு ஸி100 கோடி கொடுத்ததாக ஜெயலலிதா கூறினார். இப்ப கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டதாக கூறுகிறார்.
நிர்வாகம் சரியாக செயல்பட்டால் எப்படி நஷ்டம் வரும். ஒருபுறம் மின்கட்டணம் உயர்த்த போவதாக அறிவித்துள்ளனர். மற்றொரு பக்கம் சொட்டு நீர்பாசனம் வைத்தால் இலவச மின்சாரம் என்கின்றனர். அப்படி, இப்படி பேசி கொள்ளையடிக்கிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் நல்லது பண்ணவில்லை. இலவசம் என்று சொல்லி மக்களை ஏமாத்தாதீர்கள். இப்ப தெரியுதா உங்க தலையில கையவைச்சுட்டாங்க.
கடந்த ஆட்சியில் இருந்து மாற்றம் வரும் என்று நினைத்தேன். ஆனால் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கு. காவல் துறையை கேட்கிறேன். நெஞ்சில் வைத்து சொல்லுங்க, யாராவது திறமை அடிப்படையில் வேலைக்கு வந்திருக்கேன்ணு சொல்லுங்க பார்ப்போம். பணம் கொடுத்து வந்ததால்தான் வட்டியை கட்ட இப்போது கையை நீட்டுகின்றனர். மக்களுக்கு தேவை என்னவோ அதை செய்யுங்க. காவல் துறை ஒழுங்கா இருந்திருந்தால் நாடு நல்லா இருந்திருக்கும். மணல் கொள்ளையை தடுத்து விடுவதாக சொன்னார்கள். இப்போதும் கொள்ளை தொடருது.
அதிமுக அரசு எதுவுமே பண்ணாம மக்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையும் கை நீட்டுகிறது. அதிகாரிகளும் கை நீட்டுகிறார்கள். இப்படி ஏ டூ இசட் வரை திருடர்களாக இருந்தால் மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும். பல கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. சமச்சீர் கல்வியை தடுக்கும் வகையில் புதிய புத்தகங்களை அச்சடித்தனர். இப்படி மக்கள் வரிப்பணத்தை சீரழித்து விட்டனர்.
இந்த பணம் இருந்திருந்தாலே விலை ஏற்றம் வந்திருக்காது. மாறி மாறி ஆட்சி செய்தவங்க எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அதுதான் இந்த நிலை வந்திருக்கு.
மக்களை நேசிக்கிறவங்க கையில ஆட்சியை கொடுத்துப்பாருங்க. அதிமுக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில் ஜெயலலிதாவை சந்தித்து பாராட்டு சொல்லவில்லை என குற்றம் சாட்டினர். பாராட்டுகிற அளவுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. மக்கள் அப்படியே இருக்கக் கூடாது. ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும்.
சவால் விட்டு சொல்கிறேன். ஆட்சியை கலைத்து விட்டு ஒரு ஆண்டு கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பின்பு தேர்தலை வைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். கடந்த ஆட்சியை பிடுங்கி, ஒரு கும்பல் கையில கொடுத்து விட்டேன். மக்கள் பிரச்னைக்காக போராடி சிறை செல்ல தேமுதிக தொண்டர்கள் தயாராக உள்ளனர். மக்கள் பிரச்னைக்காக வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு இறங்குகிற கேரக்டர் நான்.
மக்களுக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உண்ணாவிரதம் நடத்தக் கூட அனுமதி தராமல் இழுத்தடித்தனர். நானும் பார்த்தேன். என்னுடைய கட்சி அலுவலகத்திலே வைத்து விட்டேன். காலையில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கட்டண உயர்வால் பஸ்களில் பயணிகளே இல்லாத நிலை தான் உள்ளது.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
மாட்டு வண்டியில் வந்த தொண்டர்கள்
உண்ணாவிரத போராட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது. கட்சி தலைவர் விஜயகாந்த், 8.15 மணிக்கு தனது மனைவி பிரேமலதாவுடன் அங்கு வந்தார். உண்ணாவிரதத்துக்கு விஜயகாந்த் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்எல்ஏ, இளைஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, நல்லதம்பி எம்எல்ஏ, உயர்மட்ட குழு உறுப்பினர் ஷெரீப், மாவட்ட செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருகம்பாக்கத்தை சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் 30 பேர், 3 மாட்டு வண்டிகளில் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். ‘Ôபஸ்சில் வர வசதியில்லாததால் மாட்டு வண்டியில் வந்தோம்ÕÕ என்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், எம்எல்ஏ பீமாராவ் ஆகியோர் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment