Thursday, November 03, 2011ஆப்கானிஸ்தானுக்கு படையினரை அனுப்பி வைப்பதில்லை என்ற பாதுகாப்புச் செயலாளரின் தீர்மானம் சரியானதே என மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினரை ஈடுபடுத்துவது தொடர்பில் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்ததாக அண்மையில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிராகரித்திருந்தார்.
இழிவான ஆப்கான் யுத்தத்தில் இலங்கைப் படையினர் பங்கு பற்றியிருந்தால் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டிருக்கும் என அலவி மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும், நேட்டோ படையினரும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைதி காக்கும் பணிகளுக்காக அன்றி யுத்தத்தில் ஈடுபடுவதற்கே இலங்கைப் படையினர் அழைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment