Wednesday, November 02, 2011
விக்கி லீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜுலியன் அசேஞ்ஜை பிரித்தானியாவிலிருந்து சுவீடனுக்கு நாடுகடத்துவது குறித்த இறுதி தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது.
அமெரிக்க இராஜாங்க விவகாரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த விக்கி லீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகருக்கு எதிராக பாலியல்
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இவரை சுவீடனுக்கு நாடுகடத்துவதா இல்லையா என்று லண்டன் நீதிமன்றம் இன்று தீர்மானிக்கவுள்ளது.
நாடு கடத்துமாறு சுவீடன் விடுத்திருந்த வேண்டுகோளை பிரித்தானியா ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும், இந்த தீர்மானத்துக்கு எதிராக ஜுலியன் அசேஞ் மேன்முறையீடு செய்திருந்தார்.
சுவீடன் பெண்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. அமெரிக்க இராஜாங்க தகவல்களை வெளியிடும் பணிகளை நிதி நெருக்கடியினால் விக்கி லீக்ஸ் இணையத்தளம் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment