Thursday, November 24, 2011முன்னாள் எரிசக்தி மின்சக்தி அமைச்சரும் பிரதி பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த சற்று நேரத்திற்கு முன்னர் காலமானார்.
கண்டி பொது வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக வைத்தியசாலையின் நரம்பியல் விசேட நிபுணர், வைத்தியர் ரஞ்சித் விக்ரமசிங்க கூறினார்.
1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த, 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது.
தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
இவர் மாவனல்லை தொகுதியின் முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகனாவார்
கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை, கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார்.
இவர் முன்னாள் பிரதமர் அமரர் ஸ்ரீமாவோ பண்டாரநயாக்கவின் சகோதரரும் ஆவார்.
No comments:
Post a Comment