Saturday, November 05, 2011மேற்குலக நாடுளுக்கும், புலிகளுக்கும், மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்லும் அரசியல் கட்சிகளை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய காலாணித்துவ ஆட்சியாளர்களுக்கு கோள் சொல்லும் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் குறித்து விசாரணை நடத்தி அவற்றை தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வினைத்திறனற்ற நிறுவனங்களை தேசியமயப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தேச யோசனைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தோல்வியடைந்த அரசியல் கட்சிகளை சுவீகரிக்கும் அதிகாரத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் எந்தவொரு நிறுவனமும் நட்டமடைய முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வர்த்தக நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து மக்கள் போதியளவு வழிப்புடன் செயற்பட வேண்டியது
அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment