Saturday, November 05, 2011
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ நேரடியாக உதவி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயும், பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஆப்கன்-பாகிஸ்தான் இடையே சுமூக உறவு இல்லாத நிலையில், ராணுவ ஒத்துழைப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்த பயிற்சியில் இருநாடுகளும் இணைந்து ஈடுபட முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக ஆப்கன், துருக்கியுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் 3 நாடுகளின் உள்துறை அமைச்சர்களும் நேற்று கையெழுத்திட்டனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெமினா ஜான்ஜுவா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட 3 நாட்டு போலீசார், ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவார்கள். ராணுவ ஒத்துழைப்பும் பரஸ்பரம் வழங்கப்படும். ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவ பாகிஸ்தான் விரும்பு கிறது என்றார்.

No comments:
Post a Comment