Monday, November 21, 2011

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அளவில் இலங்கை வரவுள்ளது!

Monday, November 21, 2011
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அளவில் இலங்கை வரவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் நிதி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டே இந்த குழு இலங்கை வருவதாக மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 2 தசம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலான கடன்கள் தவணைமுறையில் பல தடவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால், 218 தசம் 3 மில்லியன் அமெரிக்க
டொலர்களை இலங்கைக்கு வழங்க கடந்த ஏப்ரல் மாதம் இணங்கப்பட்டது.

இந்த நிதி 6 தவணைகளில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில் இலங்கையின் நிதி நிலைமைகள் மற்றும் பொருளாதார முகாமைத்துவம் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment