Tuesday, November 01, 2011COLOMBO :மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை பார்வையிடச் செல்பவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
11 2 712 812 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என திணைக்களத்தின் பணிப்பாளர் ஹாஷ்வர சேனாங்க குணரத்ன குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம் தெஹிவளை மிருகக் காட்சி சாலை மற்றும் பின்னவலை யானைகள் சரணாலயம் ஆகியன தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என பணிப்பாளர் கூறினார்.
இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எந்தவொரு பார்வையாளருக்கும் தமது முறைப்பாடுகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.
அத்துடன் விலங்குகளுக்கும் பின்னவலை யானைகள் சரணாலயத்திலுள்ள யானைகளுக்கும் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹாஷ்வர சேனாங்க குணரத்ன மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment