Tuesday, November 01, 2011
COLOMBO: பாதாள உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்தும் முறையான திட்டமொன்றின் அவசியத்தை முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு செயற்பாடு வலையமொன்று அவசியம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாள உலக கோஷ்டியினரை சுற்றிவளைப்பதற்காக செயற்படும் உத்தியோகஸ்தர்களுக்கு முறையாக சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன குறிப்பிடுகின்றார்.
அனைத்து நடவடிக்கைகளையும் பலத்த கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதாள கோஷ்டியினர் தொடர்பான தகவல்கள் சேகரிப்பதுடன், அதனூடாக ஆய்வுகளை மேற்கொண்டு, பாதாள கோஷ்டியினர் நடமாடும் இடங்கள் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இனங்காண வேண்டும் என ஜயந்த விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.
இந்த நடவடிக்கைக்காக தெரிவுசெய்யப்பட்ட குழுக்கள் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் குறித்த பகுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அத்துடன் குறித்த குழுவினரால் விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை பாதாள உலகக் கோஷ்டியினரை கைது செய்வதுடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களையும் சட்டத்தின் முன்னாள் கொண்டு வர வேண்டும் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்ரா பெர்னாண்டோ சுட்டிக்காட்டுகின்றார்.
போதைப் பொருள், சொத்துக்களை அபகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் மேலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறிகின்றார்.
பாதாள உலகக் கோஷ்டியினரை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹனவுடன் நியூஸ் பெஸ்ட் வினவியது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அந்த நடவடிக்கைகளுக்காக செயற்பட்டு திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதாள உலக கோஷ்டியினரை இனங்காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் பாதாள கோஷ்டியினர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இது தொடர்பில் பாரிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment