Saturday, November 5, 2011

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக தாக்குதல் நடத்த சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன!

Saturday, November 05, 2011
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட காலக் கெடுவினை விடவும் நான்கு நாள் பிந்தியே இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட தயாராகி வருவதாக சிரேஸ்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகவும், பாராளுமன்றில் சமர்ப்பித்த பின்னர் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இருந்தே சில சக்திகள் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தயராகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment