Saturday, November 5, 2011

இலங்கையுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் நோர்வே அறிவித்துள்ளது!

Saturday, November 05, 2011
இலங்கையுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வே அறிவித்துள்ளது. இதுவரை காலமும் அபிவிருத்தி கூட்டுறவை மையமாகக் கொண்டே உறவே இலங்கையுடன் பேணப்பட்டு வந்ததாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த உறவு வர்த்தக ரீதியாக வியாபிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை பேணுவதில் நோர்வே ஆர்வம் காட்டி வருவதாக அந்நாட்டு பிரதித் தூதுவர் ஜொன் ஒ பிரட்ஹொல்ட் தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நோர்வே கூடுதலான உதவிகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் வலுவான உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். யதார்த்தமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வழங்கும் முனைப்புக்களுக்கு நோர்வே பூரண ஒத்தழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே மண்ணில் சட்டவிரோதமான செயல்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment