Sunday, November 20, 2011கொழும்பில் குடியிருப்பாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜம்பட்டா வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்தப் பதிவு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆம் பிரிவின் கீழ் பொலிஸ் நிலையங்களிலுள்ள பொதுமக்கள் பொலிஸ் பிரிவினால் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நடைமுறையில் இருந்த அவரகாலச் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட குடியிருப்பாளர் விபரப் பதிவானது பொலிஸ் கட்டளைச் ட்டத்தின் 23 ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த விடயம் குறித்து, அச்சம் அடையத் தேவையில்லை என்றும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இன, மத, மொழி வேறுபாடின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுகள், அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு ஜெம்பட்டா வீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையானது அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களைக் கணக்கெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையென கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் குறிப்பிடுகின்றார்.
குறித்த பகுதியில் இருப்பவர்களுக்கு மாடி வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நோக்கில் குடியிருப்பு உரிமையாளர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் இப்படியான பதிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபைபின் அதிகாரிகள் மூலமாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், இதனை பொலிஸார் மேற்கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் ஓர் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார் மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த பதிவு நடவடிக்கையினை நிறுத்துவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment