Sunday, November 20, 2011

கிழக்கு மாகணத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த ஆயுதங்களில் 3440 ஆயுதங்கள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்!

Sunday, November 20, 2011
கிழக்கு மாகணத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த ஆயுதங்களில் 3440 ஆயுதங்கள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட பகிரங்க அறிவிப்பின்னரே இவை ணப்படைக்கப்ட்டள்ளன எனவும் பொலிஸாரும் கூறினர்.அம்பாறை, கந்தளாய், திருகோணமலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசமிருந்த ஆயுதங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை எல்லைப்புற சிங்கள கிராமங்களின் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ந்து தம் மறைத்து வைக்கபட்டிருக்கும் ஆயுதங்களைக் கண்டு பிடிப்பதற்காக பாரியளவிலான தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment