Sunday, November 6, 2011

புலிகளின் ஆலேசகர்களாக முன்னாள் இலங்கை அரச அதிகாரிகள்: மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவை நிறுத்துவது குறித்து இலங்கை அரசு கவனம்!

Sunday, November 06, 2011
இலங்கை அரச சேவையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவோரின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவை நிறுத்துவது குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓர் உயரதிகாரியும் நிதியமைச்சைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற ஓர் அதிகாரியும் தற்போது புலிகளின் ஆலோசகர்களாக வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment