Sunday, November 06, 2011இந்தியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான 14 இலங்கை மீனவர்களை இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினர் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களுடைய ஆறு படகுகளையும் இதன்போது ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள சர்வதேச கடல் எல்லையில் இந்தப் படகுகளும் மீனவர்களும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டாக அவர் கூறினார்.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த மீனவர்களை இந்திய கரையோக பாதுகாப்பு பிரிவினர் அண்மையில் கைது செய்திருந்தனர்.
No comments:
Post a Comment