Wednesday, November 16, 2011பயங்கரவாதம் சம்பந்தமாக உலகளவில் புகழ்பெற்ற நிபுணர் டாக்டர் ரோஹான் குணரத்ன, இலங்கைப் பாதுகாப்பின் எதிர்காலம்: மேற்கு மண் மீது நிலவும் புலிகளின் மீதான எதிர்பு” என்ற தொனிப்பொருளில் பிரிட்டிஷ் அறிஞர்கள் சங்கத்திற்கு இன்று (நவ-16) பி.ப. 5:00 மணியலவில் கொழும்பு-03 ஆல்ஃபிரட் ஹவுஸ் கிரவுன்ட்ஸில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அரங்கத்தில் ஒரு விரிவுரையை வழங்கவுள்ளார்.
டாக்டர் ரோஹன் குணரத்ன இலங்கை பயங்கரவாதத்தப் பிரச்சனைகள் தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே ஆராய்துவருவதுடன், அதிகாரசபைகளுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட அவற்றிக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.
அவர், உலகின் மிக பெரிய பயங்கரவாத எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாங்களில் ஒன்றான, சிங்கப்பூரின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தின் (ICPVTR) தலைவராகவும் செயற்படுகின்றார்.
அவர் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பாதுகாப்பு கற்கைகளுக்கான எஸ் ராஜாரத்னம் பாடசாலை ஆகியவற்றின் பேராசிரியராக செயற்படுவதுடன் மற்றும் பயங்கரவாத, ஓக்லஹோமா, ஐக்கிய அமெரிக்கா தடுப்பு சர்வதேச நினைவு நிறுவனம் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு ஞாபகர்த்த நிறுவனத்தின் ஒரு மூத்த உறுப்பினரும் ஆவார்.
அவர் தேர்ச்சி பெற்று விளங்கும் இத் துறையில் 14 புத்தகங்களை எமுதியுள்ளார். இவற்றுள் இலங்கையின் குழப்ப சூழ் நிலைகள் தொடர்பான புத்தகங்களும் அடங்குகின்றன.
பொது மக்களுக்காக இலவசமாக திறந்த அடிப்படையில் மேற் கொள்ளப்படும் இந்த விரிவுரையில் பங்குபற்றுவதற்காக, பிரிட்டிஷ் அறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் வீ.யூ ரத்னாயகவை 0718262877 / 2337737 என்ற இலங்கங்களில் தொடர்பு கொள்ளவதன் மூலமும் renp@sltnet.lk என்ற இணையத் தளத்தினூடாகவும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment