Tuesday, November 8, 2011

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி வன்னி தொண்டர் ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம்!

Tuesday, November 08, 2011
நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டமொன்றினை இன்று காலை நடத்தியுள்ளனர். யாழ்.செயலகத்தின் முன்பதாக உள்ள வடக்கு மாகாண ஆளுநரது அலுவலகத்தின் முன்பதாகவே ஒன்று திரண்ட வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் காலை ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக இம்முற்றுகைப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். எனினும் அங்கு சென்ற சேர்ந்த ஆளுநரின் செயலாளரான இளங்கோவன் நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வினில் இவ்விடயம் அமைச்சர் டகளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட உள்ளதாகவும் இதனால் போராட்டத்தினை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தமது போராட்டத்தினை இடைநிறுத்திக்கொள்ள ஆசிரியர்கள் சம்மதம் தெரிவித்தனர். உரிய தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் தமது போராட்டம் தொடருமென அவர்கள் தெரிவித்தனர்.

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் ஏற்கனவே வடக்கு மாகாண கல்வி அமைச்சு முன்னதாகவும் முற்றுகை போராட்டமொன்றினை நடத்தியிருந்தனர்.

இலங்கையின் எனைய பகுதிகளைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு அரசு நிரந்தர நியமனங்களை வழங்கியிருந்த போதும் புலிகளது கட்டுப்பாட்டின் கீளிருந்தவர்கள் என்ற வகைப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக்க அரசு பின்னடித்தே வந்துள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment