Tuesday, November 08, 2011எதிர்ப்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடையத்தவறிய நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டமூலத்தின் குறைபாடுகளை திருத்தும் நிபந்தனையின் பேரில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பினை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இன்று பாராளுமன்றம் கூடியபோது அறிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதனை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முடியாதென குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக பதவி வகித்தபோது வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டி குறித்த சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தடையில்லையென சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சட்டம் மீதான விவாதம் நடைபெறும்போது அது தொடர்பிலான கருத்துக்களை வெளியிடமுடியுமென பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
No comments:
Post a Comment