Monday, November 28, 2011

ஜே.வி.பியின் உயர்மட்டம் அடுத்தவருடம் தெரிவு:ஜே வி பி கட்சி இரண்டாக பிரிவடைந்ததன் பின்னர் இடம்பெறும் முதலாவது மத்திய செயற்குழு கூட்டம்!

Monday, November 28, 2011
ஜே வி பியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை கட்சியின் தலைமையகமான பெலவத்தையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் 23 உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஜே வி பி கட்சி இரண்டாக பிரிவடைந்ததன் பின்னர் இடம்பெறும் முதலாவது மத்திய செயற்குழு கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, எதிர்வரும் ஜனவரி மாத முதல் பகுதியில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment