Monday, November 21, 2011சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில் வால் ஸ்டிரீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முகத்தில் போலீசார் மிளகு ஸ்பிரே அடித்து சித்ரவதை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வால் ஸ்டிரீட்டில் ஆயிரக்கணக்கானோர் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கிகளின் அடாவடி, தொழிலதிபர்களின் ஆதிக்கம், வறுமை, வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நியூயார்க் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுமூலம் போராட்டக்காரர்களை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் பலரை போலீசார் பிடித்து கைகளை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களை வரிசையாக உட்கார வைத்து அவர்கள் முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்து கொடுமைப்படுத்தினர். இந்த காட்சியை பலர் செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் லிண்டா கடேஹி கூறுகையில், போலீசாரின் நடவடிக்கை உறைய வைக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதுÕÕ என்று தெரிவித்தார். ஆனால், மாணவர்களை போலீசார் கொடுமைப்படுத்தியதற்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேராசிரியர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளனர். இதற்கிடையில், போலீசாரின் சட்ட திட்டங்கள்படிதான் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அத்துமீறல் எதுவும் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment