Thursday, November 24, 2011

சரத்பவார் மீது சீக்கிய இளைஞர் தாக்குதல்!

Thursday, November 24, 2011
புதுடெல்லி : மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சரத்பவார் மீது சீக்கிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். என். டி,எம்.சி அரங்கில் நடைப்பெற்ற விழாவில் கலந்து கொண்டு திரும்புகையில் சரத்பவாரின் கன்னத்தில் பலார் என்று அறைந்துள்ளார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதோடு அந்த இளைஞரை அதே இடத்திலேயே தாக்கி கைது செய்தனர்.

சரத்பவாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு அமைச்சர் சரத்பவாரே காரணம் என்று அந்த இளைஞர் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இதே இளைஞர் தான் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவந்துள்ளது....

மத்தி்ய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது திடீர் என்று ஒரு இளைஞர் யாரும் எதிர்பாரா விதமாக சரத் பவார் கன்னத்தில் அறைந்தார். இதில் சரத் பவார் நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தார்.

உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் பெயர் ஹர்விந்தர் சிங் என்று தெரிய வந்தது.

கைதாகிய அந்த இளைஞர் ஆவேசத்துடன் கூறியதாவது,

எங்கு பார்த்தாலும் ஊழல் மண்டிக் கிடக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்ததற்கு சரத் பவார் தான் காரணம். அவரை கொல்லத் தான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. நான் ஒன்றும் இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை என்றார்.

முன்னாள் அமைச்சர் சுக்ராமையும் தாக்கியவர்:

இதே ஹர்விந்தர் சிங் கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமை(86) கன்னத்தில் அறைந்தும், எத்தியும் தாக்கினார். உடனே அங்கிருந்த போலீசார் ஹர்விந்தர் சிங்கை இழுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment