Tuesday, November 08, 2011
பிரபல பொப் இசைப்பாடகர் மைக்கல் ஜக்சனின் மரணம் தொடர்பில் அவரது பிரத்தியேக வைத்தியரான கொன்ராட் முரே குற்றவாளியென லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மைக்கல் ஜக்சனின் உயிரிழப்பு குறித்து கடந்த ஆறு வார காலமாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் 58 வயதான கொன்ராட் முரேக்கு நான்கு வருடகால சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தில் கூடியிருந்த மைக்கல் ஜக்சனின் இரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக வலுவடைய தூக்க மருந்தினை அதிகளவில் உட்கொண்டமையால் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி மைக்கல் ஜக்சன் உயிரிழந்தார்.
எனினும் இந்த மருந்தினை ஜக்சன் சுயமாகவே உட்கொண்டதாக குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ள அவரது வைத்தியரான முரே கூறியிருந்தார்.
அவர் சுயமாக குறித்த மருந்தினை உட்கொள்ளவில்லை என ஜக்சன் சார்பாக வாதாடிய சட்டத்தரணி குறிப்பிட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முரேயை, சிறைத்தண்டனை விதிக்கப்படும் வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment