Friday, November 11, 2011புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் சில முன்னாள் புலி போராளிகளை சமூகமயப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சிகளை நிறைவுசெய்த மேலும் 40 முன்னாள் புலி போராளிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
இதில் மூன்று பெண்களும் அடங்குவதாக புனர்வாழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களை சமூகமயப்படுத்தும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment