Sunday, November 20, 2011

அமெரிக்க புரூக்லினில் இலங்கையர் கொலை!

Sunday, November 20, 2011
அமெரிக்க புரூக்லினில் உள்ள வீடியோ வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் போது அவர் கொலை செய்யப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொலையாளி வர்த்தக நிலையத்தில் இருந்து பல பொருட்களை பொதி செய்வதை அவதானித்ததாக காவற்துறையினருக்கு தெரிவித்திருந்த போதிலும், தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முயன்ற போதிலும், அது பலனளிக்காததன் காரணமாக அவர் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.

கொலை செய்யப்பட்டவருக்கும், சந்தேக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றதாகவும், அதன் பின்னரேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரணமானவர் 54 வயதான நிமல ரந்துனு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment