Thursday, November 3, 2011

யாழ்.அரியாலை பகுதியில் யுத்ததினால் மிகவும் வறுமை கோட்டிற்குள் உள்ள ஐந்து பெண் பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு இராணுவத்தினரால் வீடு!

Thursday, November 03, 2011
யாழ். அரியாலை பகுதியில் யுத்ததினால் மிகவும் வறுமை கோட்டிற்குள் உள்ள ஐந்து பெண் பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு சுமார் 4 லட்சம் பெறுமதியான வீடு ஒன்றை இராணுவத்தினர் இன்று கையளித்தனர்.

51 வது படைப்பிரிவு இராணுவத் தளபதி ஏ.பி. விக்கிரம ரட்ணவினால் கணவனை இழந்த சிவகுமார் ரஞ்சிதமலர் என்ற குடும்ப தலைவியிடமே இவ்வீடு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு 511 வது படைத்தளபதி லெப்ரினல் கேணல் ரணசிங்க, 512 வது படைத்தளபதி கேணல் வீரசூரிய, மற்றும் இராணுவ உயர்நிலை அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலர் எஸ். செந்தில் நந்தனன் மற்றும் மதத்தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment