Thursday, November 03, 2011ஜெருசலேம்: இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்த ஏவுகணை ஈரான் வரை பாய்ந்து சென்று தாக்கும் சக்தி படைத்தது என்று தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தற்காலத்துக்கு ஏற்ற வகையில் பல அதிநவீன ஏவுகணைகள் தயாரிப்பில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக அதிக தூரம் சென்றும் தாக்கும் அதிநவீன ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது.
டெல் அவிவ் நகரின் புறநகரில் உள்ள ராணுவ முகாமில் இருந்து ஏவுகணை வெற்றிகரமாக பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழித்தது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச பத்திரிகைகள் கூறுகையில், இஸ்ரேல் சோதனை செய்த ஏவுகணை ஈரான் வரை சென்று தாக்கும் சக்தி படைத்தது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் படைத்தது என்று தெரிவித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment