Monday, November 07, 2011அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ந்தும் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தினால் மக்கள் கிளர்ச்சி ஏற்படக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வினைத்திறனாக செயற்படாத நிறுவனங்களை தேசியமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் சொத்துக்களை அபகரிக்கும் திட்டமொன்றை சிம்பாப்வேயின் சர்வாதிகாரி ரொபர்ட் முகாபேயும் அறிமுகப்படுத்தியிருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
1956ம் ஆண்டு தனியார் நிறுவனங்களை சுவீகரிக்கும் திட்டமொன்றை அப்போதைய அரசாங்கம் பின்பற்றியதாகவும் அதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே வழிமுறைகளையே தற்போதைய அரசாங்கமும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் கைத்தொழில்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் இவ்வாறான சட்டங்கள் எப்போதும் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே டாடா, பிர்லா போன்ற உலகப் புகழ் பெற்ற செல்வந்தர்கள் உருவாகினார்கள் எனஅவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், 1956ம் ஆண்டு அரசாங்கத்தின் அடக்குமுறைகளை சில வர்த்தகர்கள் வெற்றிகரமாக எதிர்நோக்கினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment