Friday, November 4, 2011

இலங்கையில் உள்ள இந்திய கைதிகள் கோரிக்கை!

Friday, November 04, 2011
இலங்கையின் சிறைகளில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரள கைதிகள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்

அதில் கடந்த ஜூன் மாதம் சிறைக்கைதிகள் பறிமாற்றம் தொடர்பில் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இலங்கையின் அநுரதபுரம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைகளில் 34 கைதிகள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

போதைவஸ்து கடத்தல் உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர்

அவர்களில் 27 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதம் 7 பேர் கேரளாவை சேர்ந்தவர்களாவர்

இந்தநிலையில் இலங்கை இந்திய சிறைக்கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் படி இந்திய மத்திய அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குறித்த கைதிகள் தெரிவித்துள்ளனர்

எனவே, தமிழக முதல்வரே தமக்கு இந்தவிடயத்தில் நம்பிக்கையளிக்கவேண்டும் என்று கைதிகள் கோரியுள்ளனர்

No comments:

Post a Comment