Thursday, November 24, 2011

தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம்!

Thursday, November 24, 2011
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசாங்கத்தின் யோசனைத் திட்டத்தை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

ஒரே தேசத்தில் சகல இன மக்களும் சம உரிமைகளுடன் வாழக் கூடிய வகையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு பரிந்துரைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்காக தமது உறுப்பினர்களை பெயரிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூகஇ பொருளாதார அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்தும் வகையிலும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத்திட்டங்கள் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த 19 உறுப்பினர்களும்இ எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 16 அரசியல் கட்சிகளிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மொத்தமாக நான்கு பிரதிநிதிகளும் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் அறிவித்திருந்தது. எனினும்இ பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனை மற்றுமொரு காலம் கடத்தும் நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment