Tuesday, November 8, 2011

பௌத்தர்களின் வர்த்தக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் - மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்!

Tuesday, November 08, 2011
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தமது வர்த்தக நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக வெற்றிகரமாக வழிநடத்திய சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஜனாதிபதிக்கு அறிவித்தல்.

அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை வெற்றியடையச் செய்து வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அரச துறையை போன்று தனியார் துறை நிறுவனங்களினதும் பங்களிப்பு தேவை என்பது அனைவரினதும் கருத்தாகும் என மஹாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய பெறுபேறுகளை அடையத் தவறிய நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்தின் கீழ், கையேற்க உத்தேசிக்கப்பட்டுள்ள தயா கமகேவிற்கு சொந்தமான செவனகல சீனி தொழிற்சாலையை கையேற்பதைத் தவிர்க்குமாறு மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் நடவடிக்கையை கைவிடுவதுடன் தொடர்ந்தும் அந்த நிறுவனம் இலாபமீட்டும் நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான உதவியையும் ஊக்குவிப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் மஹாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment