Thursday, November 17, 2011

அதிகாரப் பகிர்வு குறித்து ஆழமாக புதிய வியூகங்களில் ஆராய்வதற்கும் அரசாங்கம் இணக்கம்-தமிழ் தேசிய (புலிகளின்) கூட்டமைப்பு!

Thursday, November 17, 2011
தமிழ்க் கூட்டமைப்புடன் எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் நான்கு கட்டப் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசு இணங்கியுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது அதிகாரப் பகிர்வு குறித்து ஆழமாக புதிய வியூகங்களில் தீவிரமாக ஆராய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. மிக முக்கியமாக அதிகாரப்பகிர்வுடன் ஆளுநருக்கான அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, நிதித்துறை ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து இந்தப் பேச்சுக்களில் விரிவாக ஆராய்வதற்கு இரு தரப்புக்களும் இணங்கியுள்ளன. நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி இணக்கம் எட்டப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட பேச்சுகளை அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் நேற்றைய சந்திப்பில் தீவிரமாக ஆழமாக ஆராய்ந்து பேசிய அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அடுத்த கட்டப் பேச்சுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.இதற்கிணங்க, அடுத்த மாதத்தில் மாத்திரம் நான்கு தடவைகள் கூடி இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ள இருதரப்பும் முக்கியமான தீர்க்கதரிசனமான விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கவுள்ளன.

டிசெம்பர் 1, 6, 14, 15 ஆம் திகதிகளை அடுத்த கட்டப் பேச்சுகளுக்கென தெரிவு செய்துள்ள இரு குழுக்களும், இத்திகதிகளில் நடைபெறும் பேச்சுகளில் அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் புதிய வியூகங்களுடன் தீவிரமாக ஆராயவுள்ளன.

இனப்பிரச்சினைக்குத் துரிதகதியில் அரசியல் தீர்வுகாணும் பொருட்டே இருதரப்பும் தொடர்பேச்சுகளை நடத்த இணங்கியுள்ளன என்று அறியமுடிகிறது.62 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பேச்சில் 13 ஆம் சுற்றுப் பேச்சுகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் மாலை 4 மணிமுதல் 5 மணிவரை இடம்பெற்றது.

ஒரு மணித்தியாலம் வரை நீடித்த பேச்சில் அடுத்தக் கட்டத்தை நோக்கி எவ்வாறு நகர்வது என்பது தொடர்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக அடுத்தக் கட்டப் பேச்சுகளை முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட பேச்சுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விடயம் உட்பட பேச்சுகளின்போது ஆராயப்படவேண்டிய விடயங்களும் இதில் இணங்காணப்பட்டுள்ளன என (புலி) கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கும், மகாண சபைகளுக்கும் இருக்க வேண்டிய அதிகாரங்கள், மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டிய அதிகாரங்கள், மாகாண சபைக்கான நிதி அதிகாரம், ஆளுநருக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் போன்றவற்றுடன் மாகாண அலகு தொடர்பாகவும் அடுத்த கட்டப் பேச்சில் விரிவாகப் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டது. இதில் அதிகார பரவலாக்கல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன்,சிங்கள அரச அதிபர் நியமனம் குறித்தும் அங்கு கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது எனவும் (புலி)கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயம் குறித்து கூட்டமைப்பினரிடம் அரச தரப்பு எதுவித தகவல்களையும் கேட்டறியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற 13 ஆம் சுற்றுப் பேச்சுகளில் அரச தரப்பில் அமைச்சர்களான சிறிபாலடி சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பேராசிரியார், ரஜீவ விஜேயசிங்க, சஜீன்டிவாஸ் குணவர்த்தன ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் , சுமந்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment