Wednesday, November 16, 2011பீஜிங்: ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கு சீன சமாதான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் சீனாவில் ‘கன்பூசியஸ் சமாதான விருது’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், சீன விவசாய ஆராய்ச்சியாளர் யுவான் லாங்பிங் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
விருதுக்கு பெயரை தேர்வு செய்ய கல்வியாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் கொண்ட தேர்வு குழுவினர் ஓட்டளித்தனர். அதிகபட்ச ஓட்டுகள் பெற்று, ரஷ்ய பிரதமர் புடின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிபியாவில் நேட்டோ படைகள் குண்டு வீச புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சமாதான விருதுக்கு அவரது பெயர் தேர்வு செய்யப்பட இதுவே முக்கிய காரணம் என்று தேர்வு குழு கூறியுள்ளது. இந்த விருது ‘சீன நோபல்’ என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment