Wednesday, November 16, 2011

சமாதான செயற்பாடுகளுக்காக நோர்வே 10 அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 28 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது!

Wednesday, November 16, 2011
போர் நிறுத்த உடன்படிக்கை காலத்தில் சமாதான செயற்பாடுகளுக்காக நோர்வே அரசாங்கம் 10அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 28 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியடைந்தது என ஆராய்ந்து நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே வழங்கிய பணத்தில் அதிகளவான பணம் குமார் ரூபாசிங்கவின் பவுண்டேஷன் ஒப் நோ என்ஷிஸ்டஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர தேசிய போர் எதிர்ப்பு முன்னணி, தேசிய சமாதான பேரவை, மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம், மக்கள் சமாதான முன்னணி, தமிழர் புனர்வாழ்வு கழகம், சேவாலங்கா, சர்வோதயா மற்றும் முன்னாள் அமைச்சர் மிலியந்த மொரகொடவின் மொரகொட நிதியம் ஆகியவற்றுக்கு நோர்வே நிதியுதவிகளை வழங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 9 வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நோர்வே அரசாங்கம் 112 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment