Thursday, November 24, 2011ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அது தொடர்பான கருத்துக்களை மக்கள் முன்வைக்கலாம் என்றும் உலக நாடுகளுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment