Tuesday, November 01, 2011
COLOMBO:பலம்பொருந்திய நாடுகள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பலவீனமான நாடுகளின் மீது பலம்பொருந்திய நாடுகள் அதிகாரத்தை பிரயோகிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி ஹியுகோ சாவேஸை பாராட்டும் வகையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலாளித்துவ நாடுகள் பல்வேறு வழிகளில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் உலக சமூகம் வெட்கமின்றி இதனை வேடிக்கை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலாளித்துவ நாடுகள் தங்களது நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள மனித உரிமைகளை காரணம் காட்டி பலவீனமான நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ படையினர் முஹம்மர் கடாபியை நடத்தி விதம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென்ற சர்வதேச விதிகளை மீறி நேட்டோ படையினர் செயற்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகலவிதமான சர்வதேச பிரகடனங்களையும் மீறி நேட்டோ படையினர் கடாபியை படுகொலை செய்துள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்னமும் சில சர்வாதிகாரிகள் உலகை ஆட்சி செய்து வருவதாகவும் அவர்கள் மேற்குலக சமூகத்தின் ஆசீர்வாதத்துடன் ஆட்சி நடத்தி வருவதனால் நெருக்கடிகளை எதிர்நோக்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment