Thursday, November 3, 2011

உலகின் சக்தி வாய்ந்த மனிதர் ஒபாமா!

Thursday, November 03, 2011
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அல்கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டமை, லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் உயிரிழப்பு போன்றவற்றை அடுத்து, ஒபாமா இந்தப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.

ஃபொப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ரஷ்யப் பிரதமர் பிளாடிமிர் புட்டின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபேஸ் புக் இணையத்தளத்தின் ஸ்தாபகர் மார்க் சக்கர்பேர்க் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தப் பட்டியலில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் பத்து இடங்களை பிடித்தவர்கள் :-

1. அமெரிக்க ஜனாதிபதி - பரக் ஓபாமா
2. ரஷ்ய ஜனாதிபதி - விளாடிமெர் புட்டின்
3. சீன ஜனாதிபதி - ஹூ ஜின்தாவோ
4. ஜேர்மன் பல்கலைக்கழக தலைவர் - ஏஞ்சலா மேர்கல்
5. மைக்ரோசொப்ட் தலைவர் - பில் கேட்ஸ்
6. சவுதி மன்னர் - அப்துல்லா
7. பதினாறாவது ஆசிர்வாதப்பர் - பெனடிக்
8. அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் - பென் பெனார்க்
9. பேஸ்புக் நிறுவுனர் - மார்க் சகர்பேக்
10. பிரித்தானிய பிரதமர் - டேவிட் கெமருன்

No comments:

Post a Comment