Wednesday, November 16, 2011

திருகோணமலை உப்புவெளியில் பெண்களின் நகைகளைத் திருடும் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மடக்கிப் பிடிப்பு!

Wednesday, November 16, 2011
பெண்களின் கழுத்துக்களிலிருந்து தங்க ஆபரணங்களைச் சூறையாடும் ஆறு போ் அடங்கிய கும்பல் ஒன்றைத் தாம் கைது செய்துள்ளதாகத் திருகோணமலை உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்து வீதிகளில் பயணம் செய்யும் பெண்களின் தங்க நகைகளை அறுத்துக் கொண்டு ஓடுவதே இக் கும்பலின் திருட்டுத் தொழிலாகக் கடந்த பல மாதங்களாக இருந்து வந்துள்ளது.

இந் நிலையிலேயே இக் கும்பலைத் திருகோணமலை உப்புவெளிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் இவர்கள்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்களின் தங்க ஆபரணங்களை கழுத்திலிருந்து சூறையாடி திரிந்த ஆறு பேரை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான செல்வநாகபுரம் பகுதியில் 07 இலட்சம் பெறுமதியான பொருட்களையும் உடைத்து களவாடியதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவருகின்றது.

இது இவ்வாறிருக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகச் செயற்பட்டு வந்தவர் இராணுவத்திலிருந்து விலகியவர் என்பதும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரொஹான் ஐயவர்தன முன்னிலையில் ஆஐர்படுத்திய வேளை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

திருடர்கள் தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment