Thursday, November 17, 2011

நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டமை பாரிய முரண்பாடுகள் ஏற்பட வழிகோலியது-சந்திரிக்கா பண்டாரநாயக்க!

Thursday, November 17, 2011
தனிச் சிங்கள சட்ட மூலம் மாபெரும் தவறாக கருதப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டமை பாரிய முரண்பாடுகள் ஏற்பட வழிகோலியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் சம உரிமை கோரிய தமிழ் மற்றும் ஏனைய இன சமூகங்களுக்கு இந்த சட்டம் பெரும் தடையாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்டத்தினால் தமிழர்கள் பாடசாலைகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் தலைமைத்துவமொன்று இலங்கையில் உருவாக வேண்டியதன் அவசியத்தை சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார்.

2000 ஆண்டு செலுமையான வரலாற்றைக் கொண்ட இலங்கையில் 500 ஆண்டுகள் மேற்கதைய நாடுகள் ஆட்சி நடத்தியதாகவும் அந்தக் கால கட்டம் மிகவும் மோசமான காலகட்டமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அரசியல் கலாச்சாரமொன்று நாட்டில் நிலவி வருவதாகவும் இதனாலேயே நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தவறுகள் குறித்தும் சந்திரிக்கா விளக்கியுள்ளார்.

அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்க மாணவர்கள் எதனைக் கற்றுக் கொள்ள முடியும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா, சொர்க்கபூமி எவ்வாறு தொலைந்து போனது என்பதனை கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment