Wednesday, November 16, 2011

பிங்கிரிய பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஒருவர் தற்கொலை!

Wednesday, November 16, 2011
பிங்கிரிய பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரின் பிரேத பரிசோதனை குளியாப்பிட்டி வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபர் தமது உறவினரின் வீட்டில் பொருட்களை கொள்ளையிட்ட சந்தேகத்தில் நேற்று மாலை பிங்கிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் தான் அணிந்திருந்த சாரத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் பிங்கிரிய பகுதியை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment