Wednesday, November 16, 2011கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தலைமையிலான ஆணைக்குழுவொன்றை நியமித்திரு ந்தார்.
இந்த ஆணைக்குழு நாடு முழுவதிலும் 40 இடங்களில் 57 பொது சந்திப்புக்களை நடத்தி சாட்சியங்களைப் பதிவுசெய்து கொண்டிருந்தது.
இந்த ஆணைக்குழு முன்னிலையில் 5 ஆயிரத்து 100 பேர் எழுத்துமூலமான சாட்சியங்களை வழங்கியிருப்பதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் நேரடியான சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தனர்.
இதில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே கூடுதலானவர்கள் சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தனர். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வழங்கிய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டி ருப்பதாக லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இறுதி அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ள போதும், ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட இரகசிய ஆவணங்கள் மற்றும் எழுத்துமூலமான ஆவணங்களைக் கோவைப்படுத்தும் பணிகளுக்காக எதிர்வரும் இரண்டு மாதங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தொடர்ந்தும் பணியாற்றுவார்கள் என்றும் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆணைக்குழுவில் பதிவான சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களை இரகசியமாகப் பாதுகாப்பதற்காக சுவடிகள் திணைக்களத்தி டம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அதற்காகக் கோவைப்படுத்தும் செயற்பாடுகள் எதிர் வரும் 2 மாதங்களில் முன்னெடுக்கப் படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment