


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 1,200 கணணிகள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்காக முதலமைச்சரினால் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேற்படி பாடசாலைகளுக்காக வழங்கி வைக்கப்பட்ட கணணிகள் உரிய வகையில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்கும் பொருட்டு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயதரப் பாடசாலைக்கு நேற்று முன்தினம் திடீர் விஜயம் செய்த முதலமைச்சர் மாணவர்கள் கணணிப் பயிற்சியில் ஈடுபடுவதனைப் பார்வையிடுவதனையும் குறித்த பாடசாலையின் அதிபர் ஆசிரியரோடு உரையாடுவதனையும் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment